அன்பு

அறிவு

அறிவு

அறிவு

அறிவு

அறிவு

அறிவு

அறிவு

அறிவு

அறிவு

வெள்ளி, 11 ஜனவரி, 2013

எலுமிச்சையிலிருந்து மின்சாரம் 

 மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை!


குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-

தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின்  மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.

இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழைய குற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.

அப்போதுதான் புது வழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதிலிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம் பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பிகளால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.

மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

Thanks : http://adiraixpress.blogspot.in
நன்றி:- இந்நேரம் டாட் காம்

வியாழன், 10 ஜனவரி, 2013


அறிவியல் கண்காட்சி: சிறுநீரிலிருந்து மின்சாரம்!


திருப்பூர், செப்.2:   மெட்ரிக். பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மனித சிறுநீர் மற்றும் கழிவு நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதை திருப்பூர் பள்ளி மாணவிகள் செய்து காட்டியத
திருப்பூர், செப்.2:   மெட்ரிக். பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மனித சிறுநீர் மற்றும் கழிவு நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதை திருப்பூர் பள்ளி மாணவிகள் செய்து காட்டியது அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருப்பூர் சிவசுப்பிரமணியம் செட்டியார் வீதி வி.ஏ.டி. அறக்கட்டளை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இக்கண்காட்சியில் திருப்பூர் சுற்று வட்டாரத்திலுள்ள 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

அதில், திருப்பூர் சிறுமலர் மெட்ரிக். பள்ளி மாணவிகள் கௌசல்யா, இந்துபிரியா ஆகியோர் நாள்தோறும் உபயோகப்படுத்தி வீணாக்கப்படும் பொருட்களைக் கொண்டும், மனித சிறுநீர் மூலமும் மின்சாரம் தயாரிக்கும் முறையை விளக்கினர். அதை நிரூபிக்கும் விதமாக உணவுப் பொருட்களான கீரை, மனித சிறுநீர் ஆகியவற்றில் இருந்து நேரடியாக மின்சாரம் தயாரித்து அதன் மூலம் சிறிய மின் விளக்கை எரிய வைத்துக் காட்டினர் (படம்).
தவிர, சாக்கடை கழிவுநீரில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அம்மாணவிகளின் படைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதே பள்ளியைச் சேர்ந்த சாய்சித்தார்த், பென்சன்ஜோசப் ஆகியோர் ஆற்றலை சேமிக்கும் முறை குறித்தும், விஏடி பள்ளி மாணவர்கள் வீரப்பன், சவுந்தர்ராஜ் ஆகியோர் பனிமூட்டம் அதிகமாக உள்ள மலைப் பிரதேசங்களில் தெளிவாகத் தெரியும் வாகன விளக்குகளையும் காட்சிக்கு வைத்து விளக்கம் அளித்தனர்.

மேலும், விஏடி பள்ளி மாணவர்கள் பிரவீன், சுதாகர் ஆகியோர் ஓசோன் படலம் குறித்தும், கே.பி.கே பள்ளி மாணவிகள் சில்பா, ஜெனிபர் ஆகியோர் எரிமலை சீற்றம் பற்றியும், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் ஓவியா, நிவேதா ஆகியோர் சாய ஆலைகளால் ஏற்படும் மாசு குறித்தும் விளக்கமளித்தனர்.

காற்றாலைகள், பழங்களிலிருந்து மின்சாரம் தயாரித்தல், தண்ணீரை சுத்திகரித்தல், பனி பிரதேசங்கள், நாகரிக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், ஏவுக னை, செயற்கை கோள், தானியங்கி விளக்குகள் உள்ளிட்டவை குறித்தும் படைப்புகள் மூலம் மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்ததை அனைத்து தரப்பினரும் பாராட்டின ர். முன்னதாக கண்காட்சியை பள்ளி தாளாளர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். மாவ ட்ட ஏடிஎஸ்பி சுந்தரவடிவேல், சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
Thanks : http://dinamani.com

புதன், 9 ஜனவரி, 2013


ஒரு லிட்டர் சிறுநீர் 6 மணி நேர மின்சாரத்தை தருகிறது.

நைஜீரியா கல்லூரி மாணவிகள் சாதனை


உச்சா போனால் 6 மணி நேரம் கரென்ட் வரும்..... இன்று சமூக இணைய தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவரும் ஒரு கட்டுரை உங்கள் பார்வைக்கு.. இக்கட்டுரையை வெளியிட்டவரின் எழுதும் பாணியிலேயே தருகிறோம்.

என்னப்பா இது மின்சாரம் இல்லாத வாழ்க்கை? பால் இல்லாத குழந்தை போல கதறுது என்ன வாழ்க்கை டானு நொந்து போறவங்களுக்கு ஒரு குட் நியூஸ், நிறைய தண்ணி குடிச்சா இனிமே நிறைய கரென்ட் கிடைக்கும்....
ஒரே குழப்பமா இருக்குதா?

நைஜீரியா கல்லூரி மாணவிகள் எல்லாம் சேர்ந்து இப்ப நம்ம நார்மல் ஜெனரேட்டருக்கு தேவையான பெட்ரோல், டீஸல் இல்லாம ஒரு மாற்றும் எரி பொருள் அதாவது சிறுநீர் போட்டாலே போதும்னு நிருபிச்சி இருக்காங்க,
இதன் செயல்முறை விளகத்தை பார்ப்போம்..

ஒரு லிட்டர் சிறுநீர் 6 மணி நேர ஓடும். முதலில் சிறுநீர் ஊற்றிய டேங்கை ஒரு எலக்ட்ரோடிக் ஷெல் மூலமா பாஸ் பண்ணனும். அங்கே அது ஹைட்ரஜனை நீக்கி இன்னும் ஒரு சேம்பருக்கு சுத்தகரிப்புக்காக செல்லும். அங்கிருந்து படத்தில் உள்ள பச்சை சிலின்டருக்குள் செலுத்தபட்டு அந்த சிலின்டரில் இருக்கும் போராக்ஸ் சிறுநீரில் உள்ள ஈரப்பசையை நீக்கி அது டெஸ்லா - டாஸ்டிக் மின்சாராமாக வெடித்து அது ஜெனேரட்டருக்குள் செல்லும்.

இது ஒரு லோக்கல் பாம் போல் தான் இப்போது எந்த வித வால்வுகளும் இல்லாமல் செயல்ப்டுகிறது ஆனால் இதுவே பாதுகாப்பாக செய்யும் தூரம் வெகுதூரத்தில் இல்லை.

ஏற்கனவே பசங்க படிக்கலைனா அந்த ********** குடின்னு பெற்றோர் சொல்லி டார்ச்சர் பன்றாங்க இதுல 14 - 15 வயசு பொன்னுங்க இதை வேற கண்டுபிடிச்சிட்டாங்க பசங்களா உங்களுக்கு டைம் சரியில்லை...

நன்றி பேஸ்புக் என்.ரவி Thanks : madawalanews.com

செவ்வாய், 8 ஜனவரி, 2013


அட்டைக்காகிதத்தில் இருந்து மின்சாரம் கண்டுபிடிப்பு!


ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழினுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது. வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட காகித அட்டையை ஒரு போத்தலினுள் இட்டு அதனுள் தண்ணீரையும் சேர்த்து நன்றாக குலுக்கி சில நிமிடங்கள் வைக்கப்பட்டது. குறித்த சில நிமிடங்களின் பின்னர் கலவையிலிருந்து உருவாகிய மின்சாரத்தில் இருந்து சிறிய மின்விசிறி சுழல வைக்கப்பட்டது.

மரத் துண்டை அரித்து உண்ணும் கறையான் பெறும் சக்தியும் இதே தொழிநுட்பத்தில் தான் இயற்கையால் செயற்படுத்தப்பட்டதாக சொனி நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு முகாமையாளரான Chisato Kitsukawa தெரிவித்தார். இதற்கு முன்னரும் இந்த வகையில் மின்சாரம் தயாரிப்பது குறித்து கல்வி ஆராச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தில் நீர்மின்சக்தி, நிலக்கரி மூலம் மின்சக்தி, அணுமின்நிலையம் போன்ற மின் உருவாகும் மூலங்களுக்கு இப்படியான மாற்றுவழிகள் மூலம் மின்சாரம் கிடைத்தால் இயற்கையும் பாதுகாப்பாக இருக்கும்.
Thanks : http://www.puthiyaulakam.com

திங்கள், 7 ஜனவரி, 2013

மிஷன் டு பாகிஸ்தான்

இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உயிர்விட்ட இந்திய ஒற்றன்:
ஒரு பிரமிப்பூட்டும் தேசபக்தரின் நிஜக்கதை



இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உயிர்விட்ட இந்திய உளவாளி

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரைச் சேர்ந்தவர் கவுசிக்.இவர் படிக்கும்போதே மோனேஆக்டிங் நடிகர்.கி.பி.1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர்காலத்தில், இவர் தேசபக்தியை வலியுறுத்தி நாடகங்கள் நடத்தினார்.இவரது நாடகங்களைப் பார்க்க வந்த ராணுவ அதிகாரிகளுக்கு கவுசிக்கை ரொம்பவும் பிடித்துப்போனது.காரணம், அந்த நாடகங்களில் கவுசிக் ஏற்றிருந்த வேடம்,உயிரே போனாலும் தேசத்தைக் காட்டிக்கொடுக்காத ஓர் உளவாளி!

உண்மையாகவே ஒற்றனாக ராணுவ அதிகாரிகள் வாய்ப்பு கொடுத்த போது உடனே கவுசிக் அதை தனது கடமையாக ஏற்றுக்கொண்டார்.புது டெல்லி,அபுதாபி,துபாய் என சுற்றி கடைசியாக பாகிஸ்தான் வந்தார்.நபி அஹமத் என்ற பெயரில் அங்கே சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.ஒரு பாகிஸ்தானியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பக்கா பாகிஸ்தானியனாக வாழ்ந்த கவுசிக், பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார்.அங்கே இருந்து கொண்டு, இந்திய ராணுவத்திற்குப் பல முக்கியமான தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார்.
ஒரு முறை இந்திய பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவைச் சேர்ந்த் இன்னும் ஒரு ஒற்றனை பாகிஸ்தானை விட்டுப் பத்திரமாக வெளியேற்றிவைக்க இந்திய ராணுவத்திலிருந்து அவருக்கு அசைன்மெண்ட் தரப்பட்டது.எதிர்பாராத விதமாக,அந்த இந்திய ஒற்றன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார்.பாகிஸ்தான் ராணுவத்தின் சித்திரவதையைத் தாங்கமுடியாத அவர்,கவுசிக் பற்றிய உண்மைகளை கொட்டிவிட்டார்.இதனால்,மாட்டிக்கொண்டார் கவுசிக்.

மொத்தம் 19 ஆண்டுகள் பாகிஸ்தானின் முல்டான் சிறையில் கவுசிக்கை பாகிஸ்தான் ராணுவம் சித்ரவதை செய்தது.அவரைப் பற்றி இந்தியா வாயைத் திறக்கவில்லை.(எப்போதுமே இந்தியா இப்படித்தான்.நயவஞ்சக சுயநலத்தின் முழுசொரூபம் இந்தியாதான்)
(இந்தியாவுக்காக பாகிஸ்தான் சென்று உளவு பார்த்த கவுசிக் உளவாளியைப்பற்றி மிஷன் டு பாகிஸ்தான்என்ற புத்தகத்தினை கிருஷ்ணா தர் என்பவர் எழுதி வெளியிட்டார்.அந்த புத்தகத்தில் அந்த உளவாளி கவுசிக்தான் என்பதை கிருஷ்ணா தர் சொல்லவே இல்லை.
கி.பி.2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஜெயிலில் நபி அஹமத் என்ற பெயரில் இறந்துபோனது ரவிந்திர கவுசிக் என்ற இந்தியர்தான் என்பதை இந்துஸ்தான் டைம்ஸ் பிரகடனப்படுத்தியது.)

கடைசியாக,தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில், “நான் இதே வேலையை அமெரிக்காவுக்காகச் செய்து இருந்தால்,கைது செய்யப்பட்ட மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன்என்று மனம் நொந்து அழுதிருந்தார்.அதற்கடுத்த மூன்றாவது நாளில் கவுசிக் இறந்துவிட்டார்.
நன்றி மறக்குமா இந்தியா?மாதா மாதம் கவுசிக்கின் தாய்க்கு செலவுத் தொகை அனுப்பி வைக்கிறது.எவ்வளவு தொகை தெரியுமா? ரூ.500/-
இந்திய அரசு ஓடோடிச் சென்று தனது செல்வ மகனான கவுசிக்கைக் காப்பாற்றாமல், சாகும்வரை வேடிக்கை பார்த்துவிட்டு,கவுசிக்கின் வாழ்க்கைக்கு வெறும் ரூ.500/-ஆக மதிப்பிட்டுவிட்டது.சே!

நன்றி: ஆனந்த விகடன்,இணைப்பு:உளவாளி விகடன் பக்கம் 133,வெளியீட்டு நாள்: 23.12.2009.