அறிவியல் கண்காட்சி: சிறுநீரிலிருந்து மின்சாரம்!
திருப்பூர், செப்.2: மெட்ரிக். பள்ளிகளுக்கு இடையே
நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மனித சிறுநீர் மற்றும் கழிவு நீரிலிருந்து
மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதை திருப்பூர் பள்ளி மாணவிகள் செய்து காட்டியத
திருப்பூர், செப்.2: மெட்ரிக். பள்ளிகளுக்கு இடையே
நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மனித சிறுநீர் மற்றும் கழிவு நீரிலிருந்து
மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதை திருப்பூர் பள்ளி மாணவிகள் செய்து காட்டியது
அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருப்பூர் சிவசுப்பிரமணியம் செட்டியார் வீதி வி.ஏ.டி. அறக்கட்டளை மெட்ரிக்.
மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இக்கண்காட்சியில் திருப்பூர் சுற்று
வட்டாரத்திலுள்ள 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை
காட்சிப்படுத்தினர்.
அதில், திருப்பூர் சிறுமலர் மெட்ரிக். பள்ளி மாணவிகள் கௌசல்யா, இந்துபிரியா ஆகியோர் நாள்தோறும்
உபயோகப்படுத்தி வீணாக்கப்படும் பொருட்களைக் கொண்டும், மனித சிறுநீர் மூலமும் மின்சாரம்
தயாரிக்கும் முறையை விளக்கினர். அதை நிரூபிக்கும் விதமாக உணவுப் பொருட்களான கீரை,
மனித சிறுநீர்
ஆகியவற்றில் இருந்து நேரடியாக மின்சாரம் தயாரித்து அதன் மூலம் சிறிய மின் விளக்கை
எரிய வைத்துக் காட்டினர் (படம்).
தவிர, சாக்கடை
கழிவுநீரில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் முடியும் என்றும் அவர்கள்
தெரிவித்தனர். அம்மாணவிகளின் படைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதே பள்ளியைச் சேர்ந்த சாய்சித்தார்த், பென்சன்ஜோசப் ஆகியோர் ஆற்றலை
சேமிக்கும் முறை குறித்தும், விஏடி பள்ளி மாணவர்கள் வீரப்பன், சவுந்தர்ராஜ் ஆகியோர் பனிமூட்டம்
அதிகமாக உள்ள மலைப் பிரதேசங்களில் தெளிவாகத் தெரியும் வாகன விளக்குகளையும்
காட்சிக்கு வைத்து விளக்கம் அளித்தனர்.
மேலும், விஏடி பள்ளி மாணவர்கள் பிரவீன், சுதாகர் ஆகியோர் ஓசோன் படலம் குறித்தும், கே.பி.கே பள்ளி மாணவிகள்
சில்பா, ஜெனிபர்
ஆகியோர் எரிமலை சீற்றம் பற்றியும், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் ஓவியா, நிவேதா ஆகியோர் சாய
ஆலைகளால் ஏற்படும் மாசு குறித்தும் விளக்கமளித்தனர்.
காற்றாலைகள், பழங்களிலிருந்து மின்சாரம் தயாரித்தல், தண்ணீரை சுத்திகரித்தல், பனி பிரதேசங்கள், நாகரிக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப
முன்னேற்றம், ஏவுக னை, செயற்கை கோள், தானியங்கி விளக்குகள் உள்ளிட்டவை குறித்தும் படைப்புகள் மூலம் மாணவ, மாணவிகள் விளக்கம்
அளித்ததை அனைத்து தரப்பினரும் பாராட்டின ர். முன்னதாக கண்காட்சியை பள்ளி தாளாளர்
சுவாமிநாதன் துவக்கி வைத்தார். மாவ ட்ட ஏடிஎஸ்பி சுந்தரவடிவேல், சட்டப்பேரவை உறுப்பினர்
சி.கோவிந்தசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
Thanks : http://dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக